விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு: வேளாண்மை துணை இயக்குனர்கள் திடீர் இடமாற்றம்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் ரூ.110 கோடி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் ரூ.110 கோடி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில அதிகாரிகளை இடமாற்றம் செய்து வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
விழுப்புரம் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய மற்றும் மாநில அரசு திட்டம்) ஏ.ஜே.கென்னடி ஜெபக்குமார், நாமக்கல் வேளாண்மை துணை இயக்குனராக (உழவர் பயிற்சி நிலையம்) இடமாற்றம் செய்யப்பட்டார்.
நாமக்கல் வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) ஏ.நாச்சிமுத்து, விழுப்புரம் வேளாண்மை துணை இயக்குனராக (மத்திய மற்றும் மாநில அரசு திட்டம்) மாற்றப்பட்டார்.
கடலூர் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய மற்றும் மாநில அரசு திட்டம்) எஸ்.வேல்விழி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (வேளாண்மை) மாற்றப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜி.பூவலிங்கம், கடலூர் வேளாண்மை துணை இயக்குனராக (மத்திய மற்றும் மாநில அரசு திட்டம்) மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story