3 மாணவர்கள் தற்கொலை எதிரொலி: டுவிட்டரில் நீட் தேர்வுக்கு எதிரான ஹேஷ்டேக் டிரெண்டிங்


3 மாணவர்கள் தற்கொலை எதிரொலி: டுவிட்டரில் நீட் தேர்வுக்கு எதிரான ஹேஷ்டேக் டிரெண்டிங்
x
தினத்தந்தி 13 Sept 2020 7:48 AM IST (Updated: 13 Sept 2020 7:48 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதையடுத்து, டுவிட்டரில் நீட் தேர்வுக்கு எதிரான ஹேஷ்டேக் டிரெண்டானது.

சென்னை,

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி ஜோதிஸ்ரீதுர்கா நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் தர்மபுரி மாணவர் ஆதித்யா மற்றும் திருச்செங்கோட்டை சேர்ந்த மோதிலால் ஆகியோர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்தியா முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீட் தேர்வு நடைபெறும் சூழ்நிலையில், 3 மாணவர்களும் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் நேற்று காலை முதலே டுவிட்டரில் நீட் தேர்வை தடை செய்து தமிழக மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக (banNeet_SaveTnStudents ) என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது. இதேபோல் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு ஹேஷ்டேக்குகளும் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருந்தன.

Next Story