மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக் கூடும் இதன்காரணமாக நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தி.மலை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story