சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாஜக தயார் - பாஜக மாநில தலைவர் முருகன்
சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கூறி உள்ளார்.
கோவை,
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கோவை மாநகர் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அவர் கூறியதாவது:-
சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தயாராக இருக்கிறது. மாணவர்களின் சென்டிமென்ட்டை தவறாக திசை திருப்புகிறார்கள்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தான் நீட் தேர்வு நடக்கிறது. மாணவர்களின் உயிருடன் விளையாடக் கூடாது; எல்லா விஷயங்களிலும் ஸ்டாலின் அரசியல் செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story