நீட் தேர்வு பிரச்சினை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் நாளை போராட்டம் - டி.ஆர்.பாலு


நீட் தேர்வு பிரச்சினை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் நாளை போராட்டம் - டி.ஆர்.பாலு
x
தினத்தந்தி 13 Sept 2020 5:06 PM IST (Updated: 13 Sept 2020 5:06 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மக்களவை உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு அறிவித்துள்ளார்.

சென்னை,

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடு முழுவதும் தொடங்கியது. தமிழகத்தில் 14 நகரங்களில் நடைபெறும் தேர்வில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் பங்கேற்றனர்.  சென்னை, திருச்சி, சேலம், நெல்லை, மதுரை, கோயம்புத்தூர், கரூர், திருவள்ளூர் , கடலூர், நாமக்கல் , காஞ்சிபுரம், வேலூர் , கன்னியாகுமரி , தஞ்சாவூர் ஆகிய 14 நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகு முககவசம் அணிந்த மாணவர்கள் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில்  நீட் தேர்வு பிரச்சினை குறித்து  நாளை காலை 8 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும்,  நீட் தொடர்பாக போராட்டம் நடத்த கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என்று மக்களவை உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

Next Story