அசல் அடையாள அட்டையை மறந்துவிட்டு வந்த மாணவிக்கு உதவி செய்த மனிதநேய காவலர்!


அசல் அடையாள அட்டையை மறந்துவிட்டு வந்த மாணவிக்கு உதவி செய்த மனிதநேய காவலர்!
x
தினத்தந்தி 13 Sep 2020 4:17 PM GMT (Updated: 13 Sep 2020 4:17 PM GMT)

அசல் அடையாள அட்டையை மறந்துவிட்டு வந்த மாணவிக்கு காவலர் ஒருவர் தக்க சமயத்தில் உதவி செய்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவர் அசல் அடையாள அட்டையை மறந்து விட்டு வந்த நிலையில் அவருக்கு காவலர் ஒருவர் செய்த சம்பவம் நடந்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் திருவள்ளூரில் உள்ள கல்லூரி ஒன்றில் நீட் தேர்வு எழுத வந்த புரசைவாக்கத்தை சேர்ந்த மோனிகா என்ற மாணவி அசல் அடையாள அட்டையை வீட்டிலேயே மறந்துவிட்டு வந்தது சோதனையில் தெரியவந்தது.

இதனை அடுத்து அந்த மாணவி கதறி அழுத நிலையில் இதுகுறித்து அங்கிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர் அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் அசல் அடையாள அட்டையை வீட்டில் மறந்துவிட்டு வந்ததை கூறினார்.

இதனை அடுத்து  காவலர் மகேஷ்வரன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் மாணவியின் தாயாரை அழைத்துச் சென்று அசல் அடையாள அட்டையை எடுத்து வந்து கொடுத்து உதவி செய்தார். இதனையடுத்து அந்த காவல்துறை அதிகாரிக்கு மற்றும் காவலர் மகேஷ்வரனுக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story