தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை நாளைக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்
மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பின்னர் தமிழக சட்டசபை கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை,
தமிழக சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் முக கவசம் அணிந்து சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றனர்.
உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி முக கவசம் அணிந்து பங்கேற்றனர். திமுக எம்பிக்கள் நீட் தேர்வுக்கு எதிரான வாசகம் பொறிக்கப்பட்ட முக கவசம் அணிந்திருந்தனர்.
இந்த ஆண்டு மரணம் அடைந்த எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு இன்று கூட்டத்தொடரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வசந்தகுமார் எம்பி உள்ளிட்டோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின் சட்டசபை கூட்டத்தை சபாநாயகர் தனபால் நாளைக்கு ஒத்திவைத்தார். 3 நாட்கள் மட்டுமே நடக்கும் சட்டசபையின் 2வது நாள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
Related Tags :
Next Story