மாநில செய்திகள்

கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாவுக்கு கொரோனா-வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார் + "||" + covid 19 - admk mla tested positive

கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாவுக்கு கொரோனா-வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்

கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாவுக்கு கொரோனா-வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்
கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
கரூர், 


தமிழகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவின் கோரப்பசிக்கு பலியானார். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சட்டசபை கூடுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி, குளித்தலை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராமர், கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஆகிய 4 பேரும் கடந்த 11-ந் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது.

கீதா எம்.எல்.ஏ

இந்தநிலையில், கடந்த 12-ந்தேதி கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதாவின் உதவியாளர் மற்றும் கார் டிரைவர் ஆகியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கீதா எம்.எல்.ஏ. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று சென்னையில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்திற்கு செல்லாமல் இருந்தார்.

இதனால் நேற்று காலை மீண்டும் கீதா எம்.எல்.ஏ., கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று மாலை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நெரூரில் உள்ள தனது வீட்டில் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவ பரிசோதனைக்கு முன்பே சீனாவில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி- உலக அரங்கில் அதிர்ச்சி
சீனாவில் தடுப்பூசி பரிசோதனைகள் முடியும் முன்பாகவே 60 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
2. கொரோனா அச்சுறுத்தல்: அயர்லாந்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு
அயர்லாந்தில் புதிதாக 1031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
3. பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் 50 சதவிதம் பேர் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றின் உச்சம் செப்டம்பர் மாத மத்தியில் இருந்ததாகவும் அதன்பிறகு குறையத் தொடங்கி உள்ளதாகவும் மருத்துவ வல்லுநர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
4. அசாமில் மேலும் 698- பேருக்கு கொரோனா
அசாமில் மேலும் 698- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் கணிசமாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.