மின்சாரம் தாக்கி பெண் பலியாக யார் காரணம்? அதிகாரிகள் விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
மின்சாரம் தாக்கி பெண் பலியாக யார் காரணம்? என அதிகாரிகள் விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை புளியந்தோப்பு பெரியார்நகர் குடிசைமாற்று வாரியத்தில் வசித்து வந்தவர் அலிமா (வயது 45). இவர், வீட்டு வேலை செய்து பிழைத்து வந்தார். இவர், நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதற்காக புளியந்தோப்பு நாராயணசாமி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மழைநீர் தேங்கி நின்றதால் பூமிக்கு அடியில் சென்ற மின்சார வயரை கவனிக்காமல் மிதித்து விட்டார். இதில், மின்சாரம் தாக்கி அலிமா உயிரிழந்தார்.
இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் நேற்று வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு) நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார்.
பின்னர், இந்த சம்பவத்துக்கு யார் காரணம்? என்பது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோர் 2 வாரத்துக்குள் தங்களது விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story