பருவமழை காலங்களில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? - அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி
டெங்கு போன்றவை பரவாமல் தடுக்க பருவமழைக்கு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது? என்று தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ‘மக்கள் நலன்’ கருதி அரசின் முன் வைக்கும் கேள்விகள். குறிப்பாக கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற முயற்சி எடுக்காததுடன், நீட் தேர்விற்கு தடை வாங்கவில்லை. தேர்வுக்கான முறையான பயிற்சியும், தன்னம்பிக்கையும் தரத்தவறியதால் எத்தனை மரணங்களை தமிழகம் தாங்கும்?
வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கான உதவித்தொகையை உண்மையான பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்க தவறி உள்ளது. ஆன்லைன் கல்வி முறையை நெறிப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது?
கொரோனோ நோய் பரவலை தடுக்க மக்களை கை கழுவச் சொன்ன அரசு, இப்போது மக்களையே கைகழுவி விட்டது ஏன்? கொரோனவால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களுக்கு அரசு சொல்லும் பதில் என்ன? கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலும், விவசாயத்துறையில் 3.4 சதவீதம் வளர்ச்சி எட்டிய நிலையில், எட்டு வழிச்சாலை எதற்கு?
பருவகால மழை, புயல் போன்றவற்றால் பாதிக்கப்படும் மீனவர்களின் பாதுகாப்புக்கு என்ன கவனம் செலுத்தப்படும்? வரலாறு காணாத பொருளாதார சரிவில் இருந்து மீள, வேலை வாய்ப்புகள் உருவாக்க என்ன திட்டம் உள்ளது? மத்திய அரசிடம் இருந்து சரக்கு மற்றும் சேவை வரிக் கான தமிழகத்திற்கான பங்கை பெற மத்திய அரசுக்கு அழுத்தம் ஏன் தரப்படவில்லை?
டாஸ்மாக் மதுபான கடைகளை எப்போது மூடப்போகிறீர்கள்? மேடு பள்ளமான சாலைகள், முறையற்ற மற்றும் பணி முடியாத மழைநீர் வடிகால் கால்வாய்கள், பரவும் டெங்கு போன்றவை பரவலை தடுக்க பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன எடுக்கப்பட்டு உள்ளது?. மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்காமல், 3 நாட்களில் சட்டமன்ற தொடரை நடத்தி முடிப்பது ஏன்? இதற்கு தமிழக அரசு பதில் அளிக்குமா?
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story