மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection confirmed in 5,652 people in Tamil Nadu today

தமிழகத்தில் இன்று 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,19,860 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,559 ஆக உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்று 983 பேருக்கு கொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,560 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 1,029 பேர் குணடைந்துள்ளனர். மேலும் கொரோனாவால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 319 பேருக்கும், திருவள்ளூரில் 282 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 189 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,768 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,64,668 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது மருத்துவமனைகளில் 46,633 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலை கடைகள் - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி 3,501 நகரும் நியாய விலை கடைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
2. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 10 சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் இன்று 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் இன்று 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டிய மாநிலத்தில் இன்று 20,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 20,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.