மாநில செய்திகள்

பொறையாறு அருகே 42 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை போனது: 3 சாமி சிலைகள் லண்டனில் மீட்பு + "||" + Looted 42 years ago near Porayaru: 3 Sami statues recovered in London

பொறையாறு அருகே 42 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை போனது: 3 சாமி சிலைகள் லண்டனில் மீட்பு

பொறையாறு அருகே 42 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை போனது: 3 சாமி சிலைகள் லண்டனில் மீட்பு
பொறையாறு அருகே உள்ள அனந்தமங்கலம் கோவிலில் இருந்த 3 சாமி சிலைகள் லண்டனில் மீட்கப்பட்டது. இந்த சிலைகள் விரைவில் இந்தியா கொண்டு வரப்படுகிறது.
பொறையாறு, 

நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ளது அனந்தமங்கலம். இந்த கிராமத்தில் அமைந்துள்ளது ராஜகோபாலசாமி கோவில். மூன்று கண்கள் மற்றும் 10 கைகளுடன் அனுமன் காட்சி தரும் சிறப்புடைய கோவில். இத்தகைய அமைப்பு தமிழகத்திலேயே இந்த கோவிலில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனிச்சிறப்பு என்னவென்றால் அனந்தமங்கலம் கோவில், ராமாயணத்துடன் நேரடி தொடர்பு கொண்டது.

ராமபிரானின் கட்டளையை ஏற்று கடலில் பதுங்கி இருந்த இரு அரக்கர்களை அழித்து, அனுமன் ராமபிரானை சந்திக்க திரும்பிக் கொண்டிருந்தபோது அனந்தமங்கலத்தில் இளைப்பாற இறங்கியுள்ளார். இயற்கை அழகுடன் இருந்த இந்த பகுதியில் மன நிறைவோடு ஆனந்தம் அடைந்தார். எனவே இந்த திருத்தலம் அனந்தமங்கலம் என அழைக்கபடுகிறது.


கடந்த 1978-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி இந்த கோவிலில் இருந்த வெண்கலத்தால் ஆன ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் அனுமன் ஆகிய 4 சிலைகள் கொள்ளை போனது. ஒட்டு மொத்தமாக நான்கு சிலைகள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொள்ளை போன சிலைகள் பல்வேறு கைகள் மாறி லண்டனுக்கு சென்று விட்டது. ராமர், லட்சுமணர் சிலைகள் தலா 30 கிலோ எடையும், சீதை சிலை 25 கிலோ எடையும், அனுமன் சிலை 15 கிலோ எடை கொண்டதாகவும் இருந்தது. சிங்கப்பூரில் ‘இந்தியா பிரைடு’ (பெருமை மிக்க இந்தியா) என்ற தன்னார்வ நிறுவனம் இயங்கி வருகிறது.

இதன் அமைப்பாளர்கள் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உலவும் தகவல்களின் உதவியுடன் இந்திய கோவில்களில் இருந்த கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளை மீட்க உதவி வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் லண்டனில் ஒரு ராமர் சிலை விற்பனைக்கு உள்ளது என்பதை அறிந்தார்.

அந்த சிலை விஜயநகர பேரரசு காலத்தை (கி.பி 15-ம் நூற்றாண்டு) சேர்ந்தது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக்கொண்டு, இந்தியாவில் உள்ள எந்த கோவிலில் இது போன்ற சிலைகள் காணாமல் போயிருந்தன என்பது குறித்த ஆராய்ச்சியில் விஜயகுமார் இறங்கினார். அப்போது 1978-ம் ஆண்டு அனந்தமங்கலத்தில் உள்ள ராஜகோபாலசாமி கோவிலில் சிலைகள் காணாமல் போனது தெரிய வந்தது.

மேலும் புதுச்சேரியில் உள்ள ஆவணக்காப்பகம் ஒன்றில் இருந்த அனந்தமங்கலம் கோவில் சிலைகள் குறித்த புகைப்படங்கள் மூலம் லண்டனில் விற்பனைக்கு உள்ள சிலை, அனந்தமங்கலம் கோவில் சிலைதான் என உறுதியானது. இதனையடுத்து விஜயகுமார், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், லண்டன் சிறப்பு படையினர் உதவியுடன் இங்கிலாந்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

இதை அறிந்த பழங்கால பொருட்கள் சேகரிக்கும் ஒருவர், அந்த சிலைகள் தன்னிடம் இருப்பதாகவும், திருட்டு சிலை என அறியாமல் தான் வாங்கியதாகவும் தன்னிடம் உள்ள ராமர், லட்சுமணர், சீதை ஆகிய சிலைகளை திருப்பித்தந்து விடுவதாகவும் கூறினார். இதனையடுத்து அந்த சிலைகளை போலீசார் கைப்பற்றி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்தனர். இதற்காக நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் லண்டன் முருகன் கோவில் பூசாரிகள் அந்த சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் இந்த சிலைகள் இந்திய தூதர் காயத்ரி குமாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சிலைகள் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

42 ஆண்டுகளுக்கு பின்பு கொள்ளை போன 4 சாமி சிலைகளுள் 3 சிலைகள் மீண்டும் கிடைத்துள்ளதால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கான விதிமுறைகள் போல்... 1665ஆம் ஆண்டே வேறு ஒரு நோய்க்கு வெளியான விதிமுறைகள்...
கொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் போல் 1665ஆம் ஆண்டே இதுபோல் ஒரு நோய்க்கு விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
2. சீனாவில் இருந்து தலைமையகத்தை லண்டனுக்கு மாற்ற டிக் டாக் பரிசீலிப்பதாக தகவல்
சீனாவில் இருந்து தலைமையகத்தை லண்டனுக்கு மாற்ற டிக் டாக் நிறுவனம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
3. மாளிகை தண்ணீர் தொட்டியை உலகின் மிக விலை உயர்ந்த ஈவியன் குடிநீரை கொண்டு நிரப்பிய கோடீஸ்வரர்
தனது மாளிகை தண்ணீர் தொட்டியை உலகின் மிக விலை உயர்ந்த ஈவியன் குடிநீரை கொண்டு நிரப்பிய அமீரக கோடீஸ்வரர்
4. இரண்டு வாரங்களில் லண்டனில் கொரோனாவே இல்லாத நிலை உருவாகும்!!!
லண்டனில் ஒரு நாளில் 24 பேருக்கும் குறைவானவர்களே கொரோனா தொற்றுக்கு ஆளாவதால் இன்னும் சில வாரங்களில் கொரோனா ஒழிக்கப்பட்டுவிடும் என புதிய புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.
5. வங்கி மோசடியில் லண்டனில் கைதான நிரவ் மோடியை நாடு கடத்தும் விசாரணை - 11 ஆம் தேதி தொடங்குகிறது
ரூ.14 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் சிக்கி, லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கின் இறுதி விசாரணை, 11-ந்தேதி தொடங்குகிறது.