பெரியாரின் 142வது பிறந்தநாள்: சென்னையில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
பெரியாரின் 142வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை,
பெரியாரின் 142-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், “மானுட சமுதாயத்துக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் கற்பித்த அறிவாசான் தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17!
சமூகநீதி-சமத்துவம்- சாதியொழிப்பு- பெண்ணுரிமைக்காக நம்மை ஒப்படைப்போம்.
மானமும் அறிவும் உள்ள சமுதாயம் அமைப்போம்!சுயமரியாதைச் சுடர் வெல்க!” என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story