பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர் பெரியார் - கமல்ஹாசன் புகழாரம்
பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர் பெரியார் என்று கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை,
பெரியாரின் 142-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெரியாரை நினைவுகூர்ந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் பலர் பெரியாருக்கு கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர் பெரியார் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர்! புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர்! 'பெரியாருக்கு முன்', 'பெரியாருக்குப் பின்' என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்" என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story