கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசின் நிதி போதுமானதாக இல்லை - மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை


கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசின் நிதி போதுமானதாக இல்லை - மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை
x
தினத்தந்தி 17 Sept 2020 12:02 PM IST (Updated: 17 Sept 2020 12:02 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசின் நிதி போதுமானதாக இல்லை என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்து வரும் நிலையில் பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசின் நிதி போதுமானதாக இல்லை என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், “கொரோனா தொற்றால் பல சோதனைகள் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாது. தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.9000 கோடி வரை தேவைப்படுகிறது. தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். 

Next Story