பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர், மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு,
கொரோனா பரவல் காரணமாக தற்போது பள்ளிகள் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில், மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்த கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே 3 ஊராட்சிகளில் 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைத்த அவர், நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், அரசு பள்ளிகளில் செப்டம்பர் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறினார். மேலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை கேட்ட பின்னர் முதலமைச்சர் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story