மாணவர்களிடம் ஆன்ட்ராய்டு செல்போன் உள்ளது ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்த எந்த சிக்கலும் இல்லை அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
என்ஜினீயரிங் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.
சென்னை,
என்ஜினீயரிங் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன்படி வருகிற 22-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஆன்லைனில் தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கான மாதிரி தேர்வு வருகிற 19 (நாளை), 20 (நாளை மறுதினம்) மற்றும் 21-ந்தேதிகளில் (திங்கட்கிழமை) நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் ஆன்லைனில் தேர்வு நடத்துவதால் கிராமப்புற மாணவர்கள் எப்படி எழுதுவார்கள்? என்று பேசப்பட்டது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் இதுபற்றி ஆய்வு நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி, இறுதி செமஸ்டர் தேர்வை எழுதும் மாணவர்கள் அனைவரிடமும் ஆன்ட்ராய்டு செல்போன் வசதி இருக்கிறது என்றும், இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஒரு மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் இந்த தேர்வு கொள்குறி வகை வினாக்களாக தான் இருக்கும் என்பதால் ஆன்ட்ராய்டு செல்போனில் எளிதாக மாணவர்கள் பதில் அளித்துவிடுவார்கள் என்பது அண்ணா பல்கலைக்கழகத்தின் கருத்தாக இருக்கிறது.
24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறும் இந்த தேர்வு காலை காலை 10 மணி முதல் 11 மணி வரை, பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை, மதியம் 2 மணி முதல் 3 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை என 4 கட்டங்களாக நடக்கிறது.

Related Tags :
Next Story