யார் பெரியவர் என்பதில் மோதல்: ரவுடியின் கூட்டாளியை கொலை செய்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை சென்னை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
யார் பெரியவர்? என்பதில் ஏற்பட்ட மோதலில் ரவுடியின் கூட்டாளியை கொலை செய்த 6 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி பாலாஜி என்ற காக்காதோப்பு பாலாஜியும், மற்றொரு ரவுடியான ரவி என்ற கல்வெட்டு ரவியும் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இடையே யார் பெரிய ரவுடி? என்பதில் மோதல் இருந்து வந்தது.
இந்தநிலையில், ரவிக்கு ஆதரவாக சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வெங்கட்டா என்ற வெங்கடேசன் என்பவர் செயல்பட்டு வந்தார். ரவியின் செல்வாக்கு அதிகமாக வெங்கடேசன் முக்கிய காரணமாக இருந்துள்ளார். இதை அறிந்த பாலாஜி, அவரது நண்பர் ரவிக்குமார் என்ற பொக்கை ரவி ஆகியோர் சிறையில் இருந்தபடியே வெங்கடேசனை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 10.8.2013 அன்று வெங்கடேசன் தனது வீட்டில் இருந்து குழந்தைகளை டியூசனுக்கு அழைத்து சென்ற போது அவரை வழிமறித்து பாலாஜி கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் கத்தியால் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி, ரவிக்குமார் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை 2-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்தது. விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட ரவிக்குமார், ரவீந்திரன் ஆகியோர் இறந்து விட்டனர். இதைத்தொடர்ந்து மற்றவர்கள் மீதான வழக்கை நீதிபதி சமீனா விசாரித்தார். அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் வி.எஸ்.நாராயணராவ் ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ரவுடி பாலாஜியின் கூட்டாளிகளான பிரகாஷ், சரண்ராஜ், கார்த்திக், அருண், பிரகாஷ், ஆனந்த் ஆகிய 6 பேருக்கு ஆயுள்தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
பாலாஜி, குமார், பாஸ்கர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Related Tags :
Next Story