பவானிசாகர் அணை நீர்மட்டம் நிலவரம்


பவானிசாகர் அணை நீர்மட்டம் நிலவரம்
x
தினத்தந்தி 18 Sept 2020 7:39 AM IST (Updated: 18 Sept 2020 7:39 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.07 அடியாக உள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரளா மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்து உள்ளது. 

இந்நிலையில், இன்று காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 100.07 அடியாக உள்ளது. அணைக்கு ஒரு வினாடிக்கு  727 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் இருப்பு 28.7 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக  2,950 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 

தொடர்ந்து ஐந்தாவது நாளாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் - 100 அடியை தாண்டியே உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

Next Story