தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்


தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை  சிறப்பாக மேற்கொண்டுள்ளது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
x
தினத்தந்தி 18 Sept 2020 2:58 PM IST (Updated: 18 Sept 2020 2:58 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ள மாநகராட்சி ஊழியர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக மேற்கொண்டுள்ளதாக் கூறினார். கொரோனா பாதித்த இந்த பேரிடர் காலத்திலும், வளர்ச்சித்திட்டங்கள், வேளாண்பணிகள், தொழில் முதலீடுகளை ஈர்ப்பது போன்றவை தடைபடாமல் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

Next Story