அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு


அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Sept 2020 9:22 PM IST (Updated: 18 Sept 2020 9:22 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற்றது. அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த ஆலோசனைக் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நியமனம் குறித்து காரசார விவாதம் நடந்தது.

ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதற்கிடையில் அதிமுக செயற்குழு கூட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ளனர். அதன்படி அதிமுகவின் செயற்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி காலை 9:45 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில், கழக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கழக செயற்குழு உறுப்பினர்களுக்குத் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என்றும் உறுப்பினர்கள் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story