தேர்தல் நடத்தி போக்குவரத்து சங்க புதிய நிர்வாகிகளை 30-ந்தேதிக்குள் அறிவிக்க வேண்டும் தேர்தல் அதிகாரியை நியமித்த ஆணை திரும்பப் பெறப்பட்டதால் குழப்பம்
தேர்தல் நடத்தி தமிழ்நாடு போக்குவரத்துத்துறை பணியாளர் ஒன்றிப்பு சங்கத்தின் புதிய நிர்வாகிகளை 30-ந்தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று போக்குவரத்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தேர்தல் நடத்தி தமிழ்நாடு போக்குவரத்துத்துறை பணியாளர் ஒன்றிப்பு சங்கத்தின் புதிய நிர்வாகிகளை 30-ந்தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று போக்குவரத்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் தேர்தல் நடத்துவதற்காக அதிகாரியை நியமித்து பிறப்பித்த ஆணை திரும்பப் பெறப்பட்டதால் பணியாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
வட்டார போக்குவரத்து அலுவலகங்களை உள்ளடக்கிய போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களின் நலன்களுக்காக ‘தமிழ்நாடு போக்குவரத்துத்துறை பணியாளர் ஒன்றிப்பு’ என்ற பெயரிலான சங்கம் கடந்த 1970-ல் இருந்து இயங்கி வருகிறது. இந்த சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். தற்போதைய தலைவர் கி.கு.சுரேஷ்பாபுவின் பதவிக் காலம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 3-ந்தேதியுடன் முடிவடைந்துவிட்டது.
இதையடுத்து சங்கத்தின் தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளின் விவரங்களை இந்த மாதம் 30-ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளரும், கமிஷனருமான தென்காசி ஜவஹர் உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக பணியாளர் ஒன்றிப்பு சங்க தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்காக தலைமை தேர்தல் அதிகாரியாக, போக்குவரத்து கமிஷனர் அலுவலகத்தின் முதன்மை கணக்கு அலுவலரான எஸ்.கோபிநாத் நியமிக்கப்பட்டார்.
இதற்கான உத்தரவினை தென்காசி ஜவஹர் கடந்த 15-ந்தேதி பிறப்பித்தார். இதற்கிடையே 2 நாட்களுக்கு பின்னர் அதாவது 17-ந்தேதி தென்காசி ஜவஹர் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு சங்க தேர்தலை நடத்த முதன்மை கணக்கு அலுவலரான எஸ்.கோபிநாத் நியமிக்கப்பட்ட ஆணை திரும்பப்பெறுவதாக அறிவித்தார். இதனால் அந்த சங்க நிர்வாகிகள் இடையே குழப்பம் நிலவி வருகிறது. தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்ட ஆணை திரும்பப் பெறப்பட்டிருப்பதால் தேர்தலை நடத்தி இந்த மாத இறுதிக்குள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்துத்துறை பணியாளர் ஒன்றிப்பு சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும், சட்ட ஆலோசகருமான கு.பால்பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போக்குவரத்துத்துறை கமிஷனரிடம் போக்குவரத்துத்துறை பணியாளர்கள் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போக்குவரத்து கமிஷனர் தேர்தல் நடத்தி வருகிற 30-ந்தேதிக்குள் புதிய நிர்வாகிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு கி.கு.சுரேஷ்பாபுக்கு உத்தரவிட்டார். கமிஷனரின் உத்தரவை வரவேற்ற பணியாளர்கள், அந்த தேர்தலை நடத்தும் பொறுப்பை கி.கு.சுரேஷ்பாபுவிடம் நடத்த பணித்ததை குறையாக கருதினார்கள்.
தேர்தல் நடத்தும் பொறுப்பை பெற்ற கி.கு.சுரேஷ்பாபு ஒருதலைப்பட்சமாக கூட்டம் நடத்தி அவருக்கு வேண்டிய ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்தார். இதை அறிந்த பணியாளர்கள் அதிர்ச்சியடைந்து மீண்டும் போக்குவரத்து கமிஷனரிடம் புகார் கொடுத்தனர். புகார் விண்ணப்பத்தை பரிசீலித்த போக்குவரத்து கமிஷனர், முதன்மை கணக்கு அதிகாரியான கோபிநாத்தை தேர்தல் அதிகாரியாக நியமித்தார். ஆனால் அந்த உத்தரவை திடீரென திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.
சங்கத்தின் தேர்தல் அதிகாரி தொடர்பாக பல உத்தரவுகள் வந்துகொண்டிருப்பதால், உண்மையான தேர்தல் அதிகாரி யார்? என்று தெரியாமல் பணியாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் தேர்தல் நடந்தால் தான் அது நியாயமான தேர்தலுக்கு வழிவகுக்கும் என்பது பணியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதுபோன்ற நிலையே தற்போது நிலவும் குழப்பத்துக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story