டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைவு


டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைவு
x
தினத்தந்தி 19 Sep 2020 2:29 AM GMT (Updated: 19 Sep 2020 2:29 AM GMT)

பெட்ரோல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் 84.21 ரூபாய் எனவும் டீசல் லிட்டர் 77.40 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று டீசல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து, 77.21 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவுமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.


Next Story