பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்


பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்
x
தினத்தந்தி 19 Sept 2020 1:59 PM IST (Updated: 19 Sept 2020 1:59 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. சூழல் சரியாகாததால், பள்ளிகளைத் திறப்பது தள்ளிப்போய்க் கொண்டிருக்கும் நிலையில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

வரும் 21ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறந்து பாடம் எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், அனைத்து வகுப்புகளும் ஒரே நேரத்தில் திறக்கப்படும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற தேவையான வகுப்பறைகள் உள்ளன என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்தார்.

Next Story