கூட்டணி கட்சிகள் கருத்து சொல்ல தடை விதிக்க முடியாது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
கூட்டணி கட்சிகள் கருத்து சொல்ல தடை விதிக்க முடியாது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை திருவெற்றியூரில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், அலோசனைக் கூட்டத்தின் போது கூட்டணி கட்சிகளுடன் ஒப்பந்தம் எதுவும் போடவில்லை என்று தெரிவித்தார். மேலும் கூட்டணி கட்சிகள் அவர்களது கொள்கைகள், தேவைகள் குறித்து கருத்து சொல்ல தடை விதிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், இளைஞர்கள் தாமாக முன்வந்து அதிமுகவில் இணைவதாகவும், முதல்வர் யார் என்பது பற்றி பேசக்கூடாது என்று 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Related Tags :
Next Story