மக்கள் பிரச்சினையை சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுப்பு - கே.என்.நேரு குற்றச்சாட்டு
மக்கள் பிரச்சினையை சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி,
திருச்சியில் இன்று 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினையை பற்றிப் பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
பாஜக, அதிமுக கட்சிகள் தான் தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டு வந்ததாகவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சியில் இருந்த போது தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் நீட் உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

Related Tags :
Next Story