கடந்த 6 மாதங்களில் 569 பி.எஸ்.என்.எல். டவர்கள் குறைவு அதிகாரிகள் தகவல்


கடந்த 6 மாதங்களில் 569 பி.எஸ்.என்.எல். டவர்கள் குறைவு அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 20 Sept 2020 1:30 AM IST (Updated: 20 Sept 2020 1:21 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி முடிவில் 4 ஆயிரத்து 824 செல்போன் சிக்னல் கோபுரங்கள் (டவர்) இருந்தன.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி முடிவில் 4 ஆயிரத்து 824 செல்போன் சிக்னல் கோபுரங்கள் (டவர்) இருந்தன. இதன் எண்ணிக்கை 2018-ம் ஆண்டு 4 ஆயிரத்து 821 ஆகவும், 2019-ம் ஆண்டு 4 ஆயிரத்து 813, 2020-ம் ஆண்டு 4 ஆயிரத்து 760 கோபுரங்களாக குறைந்துள்ளன. நடப்பு நிதியாண்டில் இதுவரை ஒரு சிக்னல் கோபுரம் குறைந்துள்ளது. நான்கு ஆண்டுகளில் 65 கோபுரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், மொபைல் போன் சிக்னல் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களும் அதிகளவில் சிக்னல் கோளாறு தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இதேபோல, நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். சிக்னல் கோபுரங்களின் எண்ணிக்கை 2017-ம் ஆண்டு மார்ச் முடிவில் 66 ஆயிரத்து 650 ஆக இருந்தது. இது 2018-ம் ஆண்டு 67 ஆயிரத்து 18, 2019-ம் ஆண்டு 68 ஆயிரத்து 29, 2020-ம் ஆண்டு 68 ஆயிரத்து 50 ஆக இருந்தன. நடப்பு நிதியாண்டில் இதுவரை, 67 ஆயிரத்து 481 கோபுரங்கள் உள்ளன. 4½ ஆண்டுகளில், கோபுரங்களின் எண்ணிக்கை 831 உயர்ந்திருந்தாலும், கடந்த 6 மாதங்களில், 569 கோபுரங்கள் குறைந்துள்ளன. இவற்றை அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

மேற்கண்ட தகவலை பி.எஸ். என்.எல். அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Next Story