சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்கள் திடீரென மூடப்பட்டது வெளிமாநில பயணிகள் குழப்பம்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய உள்நாட்டு முனைய வருகை பகுதியில் இ-பாஸ் கவுண்ட்டர்கள் திடீரென மூடப்பட்டதால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
ஆலந்தூர்,
கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதியில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. 2 மாதம் இடைவெளிக்கு பிறகு மே 25-ந் தேதியில் இருந்து சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து குறைந்த அளவில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது.
அப்போது வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து விமான பயணிகளும் கட்டாயமாக இ-பாஸ் வாங்க வேண்டும். இ-பாஸ் இல்லாதவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே வர அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் விமான பயணிகளுக்காக உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதியில் இ-பாஸ் கவுண்ட்டர்கள் அமைத்து ஷிப்டு முறையில் மாநில வருவாய்த்துறை அதிகாரிகள் பணியில் இருந்து விமான பயணிகளுக்கு இ-பாஸ்களை வழங்கி வந்தனர்.
இந்த மாதம் 1-ந் தேதி முதல் தமிழக அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்தது. அதன்படி மாவட்டங்கள் இடையே பயணம் செய்பவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. ஆனால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவித்தது.
எனவே வெளிமாநிலங்களில் இருந்து வரும் விமான பயணிகளுக்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் மாநில அரசின் இ-பாஸ் கவுண்ட்டர்கள் வழக்கம் போல் இயங்கிவந்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம் வருகை பகுதியில் இயங்கி வந்த இ-பாஸ் கவுண்ட்டர்கள் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டது. அங்கு பணியில் இருந்த செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த்துறை பணியாளர்கள், தங்கள் உடைமைகளை எடுத்து கொண்டு தங்கள் அலுவலகம் சென்று விட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்கள் மூடப்பட்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், வெளிமாநிலங்களில் இருந்து வந்த பயணிகளிடம் இ-பாஸ் இருக்கிறதா? என்று சோதனை செய்ய முடியாமல் தவித்தனர்.
இதனால் விமான நிலையத்தில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுவிட்டதா? என்று விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, சென்னைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு இ-பாஸ் முறை தொடர்ந்து அமலில் உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் பெறும்போது சமூக இடைவெளி இன்றி கூட்டம் அதிகமாக இருப்பதால் மூடப்படுகிறது. இதனால் விமான நிலைய கவுண்ட்டரில் இ-பாஸ் வாங்க முடியாது. வெளிமாநில பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே ஆன்-லைனில் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று கொள்ள வேண்டும். அந்தந்த விமான நிறுவனங்கள், பயணிகள் இ-பாஸ்களுடன் பயணிக்கின்றனரா? என்பதை கண்காணிக்கும் இந்த புதிய நடைமுறை இன்று (அதாவது நேற்று) முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்தனர்.
இந்த புதிய நடைமுறை வெளிமாநில விமான பயணிகள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே இ-பாஸ் முறை தேவையில்லை என்று அறிவித்து விட்டது. இதனால் பல மாநிலங்களில் இ-பாஸ் முறையே கிடையாது.
இதனால் வெளிமாநிலங்களில் இருந்து விமானங்களில் வரும் பயணிகள் பலர் சென்னை வந்து விமான நிலையத்தில் இ-பாஸ் பெற்று வெளியே சென்றனர். தற்போது வெளி மாநிலத்தில் இருந்தே ஆன்-லைனில் இ-பாஸ் பெற்றுதான் சென்னை வரவேண்டும் என்பது பயணிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகளே நேரடியாக ஆன்-லைன் மூலம் இ-பாஸ் விண்ணப்பித்து பெருவதிலும் பிரச்சினைகள் உள்ளன. மேலும் அதிக அளவில் கூலி தொழிலாளிகளே வருவதால் அவர்களுக்கு எப்படி இ-பாஸ் விண்ணப்பிப்பது? என்று புரியாமல் பரிதவிக்கின்றனர்.

Related Tags :
Next Story