பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை, டீசல் விலை குறைவு


பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை, டீசல் விலை குறைவு
x
தினத்தந்தி 20 Sep 2020 2:10 AM GMT (Updated: 20 Sep 2020 2:10 AM GMT)

பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

சென்னையில் நேற்று பெட்ரோல் , ஒரு  லிட்டர் 84.21 ரூபாய், டீசல் லிட்டர் 77.21 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை 3 -வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 84.21 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் நேற்றைய விலையிலிருந்து 22 பைசா விலை குறைந்து, 76.99 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


Next Story