வங்ககடலில் குறைந்தழுத்த தாழ்வுப்பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


வங்ககடலில் குறைந்தழுத்த தாழ்வுப்பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 20 Sept 2020 8:31 AM IST (Updated: 20 Sept 2020 8:31 AM IST)
t-max-icont-min-icon

வங்ககடலில் குறைந்தழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து வங்ககடலில் குறைந்தழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு வங்க கடலில் உருவாகும் இந்த தாழ்வழுத்தப்பகுதி 24 மணி நேரத்தில் வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Story