மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
சேலம்,
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் பருவ மழையால், காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மழை குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தில் ஏற்றத்தாழ்வு நீடித்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று 12,079 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 11 ஆயிரத்து 241 கன அடியாகச் சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டு வரும்நிலையில், இன்று காலை அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு 18,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையில் இருந்து நீர் திறப்பைக் காட்டிலும், வரத்து குறைவாக இருப்பதால், அணை மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. நேற்று அணையின் நீர் மட்டம் 90.84 அடியாக இருந்தது. இன்று காலை 90.26 அடியாக குறைந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 52.94 டிஎம்சியாக உள்ளது.
Related Tags :
Next Story