மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதல்வர் ஓபிஎஸ் வீடு திரும்பினார்


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதல்வர் ஓபிஎஸ் வீடு திரும்பினார்
x
தினத்தந்தி 20 Sept 2020 8:58 AM IST (Updated: 20 Sept 2020 8:58 AM IST)
t-max-icont-min-icon

வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதல்வர், வீடு திரும்பினார்.

சென்னை, 

தமிழக துணை முதல் அமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர் செல்வம் சென்னை அமைந்தகரையில்  உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக ஓ. பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 இந்த நிலையில், பரிசோதனை முடிந்து சில மணி நேரங்களிலேயே  துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வீடு திரும்பினார்.முன்னதாக, கடந்த மே 25 ஆம் தேதி பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓ . பன்னீர் செல்வம் அன்றைய தினமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Next Story