மாநில செய்திகள்

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த ஒருமித்த கருத்து இன்னும் ஏற்படவில்லை + "||" + The AIADMK has not yet reached a consensus on the chief ministerial candidate

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த ஒருமித்த கருத்து இன்னும் ஏற்படவில்லை

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த ஒருமித்த கருத்து இன்னும் ஏற்படவில்லை
அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது குறித்த ஒருமித்த கருத்து இன்னும் ஏற்படவில்லை என திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி கூறினார்.
கரூர்,

கரூர் மாவட்டத்தில் இன்று ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை பணியை மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'எல்லோரும் நம்முடன்' என்ற, திட்டத்தின் கீழ், ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை பணியை துவக்கி வைத்தார்.


அதில், கடந்த மூன்று நாட்களில், ஒரு லட்சம் உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் சேர்ந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளில் தலா, 10 ஆயிரம் உறுப்பினர்களை புதிதாக சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.

கரூர் மாவட்டத்தில், நான்கு தொகுதிகளிலும் தலா, 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், திமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொண்டுள்ளனர். ஆனால் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த ஒருமித்த கருத்து இன்னும் ஏற்படவில்லை” என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: சேலம் சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சேலம் சிலுவம்பாளையத்தில் முதலமைச்சர் பழனிசாமி கட்சி கொடியை ஏற்றிவைத்தார்.
2. எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி? நேர்முக உதவியாளர் மகாலிங்கம் தகவல்
அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி? என்ற நினைவுகளை அவருடைய நேர்முக உதவியாளர் மகாலிங்கம் பகிர்ந்து உள்ளார்.
3. 2021-ம் ஆண்டு தேர்தலில் தொடர் வெற்றி காண அயராது உழைப்போம்-எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு வேண்டுகோள்
அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, 2021-ம் ஆண்டு தேர்தலில் தொடர் வெற்றிகாண அயராது உழைப்போம் என்று தொண்டர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
4. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறி உள்ளார்.
5. புது வரலாறு படைப்போம்: தொண்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு
புது வரலாறு படைப்போம் என அதிமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.