நெல் கொள்முதல் விலை ரூ.1,150 ஆக இருக்கும்போது விவசாயிகள் ரூ.850-க்கு வியாபாரிகளிடம் விற்பது ஏன்? தமிழக அரசு விளக்கவேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தல்


நெல் கொள்முதல் விலை ரூ.1,150 ஆக இருக்கும்போது விவசாயிகள் ரூ.850-க்கு வியாபாரிகளிடம் விற்பது ஏன்? தமிழக அரசு விளக்கவேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Sept 2020 3:45 AM IST (Updated: 21 Sept 2020 3:30 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. அரசோ மசோதாக்களை ஆதரித்து நல்லபிள்ளையாக நடந்துகொள்கிறது.

சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றிய இரண்டு விவசாய விளைபொருள் விற்பனை மசோதாக்களை இன்று (நேற்று) மாநிலங்களவையில் நிறைவேற்ற பா.ஜ.க. அரசு முனைகிறது. விவசாயியின் தேவை ஆயிரமாயிரம் சந்தைகள். ஊரகப் பகுதிகளில் சிறிய நகரங்களிலும், பெரிய கிராமங்களிலும் சந்தைகளை அமைப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தோம். அதனைச் செய்யாமல், இருக்கும் ஒரே ஒழுங்குமுறை சந்தையையும் ஒழிக்கும் முயற்சியை பா.ஜ.க. அரசு செய்கிறது. விளை பொருள்களுக்கு ‘குறைந்த பட்ச விலை உத்தரவாதம்’ என்ற முறையையும் பா.ஜ.க. அரசு ஒழிக்க முயலுகிறது. எனவேதான் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் விவசாயிகள் தெருக்களுக்கு வந்து போராடுகிறார்கள்.

அ.தி.மு.க. அரசோ மசோதாக்களை ஆதரித்து நல்லபிள்ளையாக நடந்துகொள்கிறது. தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,150. ஆனால் பல விவசாயிகள் ரூ.850-க்கு தனியார் வியாபாரிகளுக்கு விற்கிறார்கள். இது ஏன் என்று தமிழ்நாடு அரசு விளக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story