மாநில செய்திகள்

வீடு தேடிவரும் ரேஷன் பொருள்: 3,501 நகரும் நியாயவிலை கடை திட்டம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார் + "||" + moving rations shops to launch on september 21 in tamilnadu

வீடு தேடிவரும் ரேஷன் பொருள்: 3,501 நகரும் நியாயவிலை கடை திட்டம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்

வீடு தேடிவரும் ரேஷன் பொருள்: 3,501 நகரும் நியாயவிலை கடை திட்டம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் நகரும் நியாயவிலை கடை வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
சென்னை, 

கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, பேரவை விதி எண் 110 ன் கீழ் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். அப்போது, அம்மா நகரும் நியாயவிலை கடை திட்டம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடை திட்டம் தொடங்கப்படவுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 168 கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் 3,501 நகரும் அம்மா நியாய விலை கடைகள் தொடங்கப்பட உள்ளது. 

இந்த திட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 36 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைய உள்ளனர். மலைப்பாங்கான பகுதிகள், காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நகரும் நியாயவிலை கடைகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் நகரும் நியாயவிலை கடை வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதம் ஏற்படவில்லை - முதல்வர் பழனிசாமி
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
2. மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை
ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
3. கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. பொதுமக்கள் பண்டிகை காலங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் பண்டிகை காலங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருகிறது: முதல்வர் பழனிசாமி
கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.