ரசாயன கழிவுகள் வெளியேற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை தேவை; டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


ரசாயன கழிவுகள் வெளியேற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை தேவை; டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Sep 2020 1:12 PM GMT (Updated: 21 Sep 2020 1:12 PM GMT)

ரசாயன கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

ரசாயன கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் குரோமிய கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற குரோமிய கழிவுகள் விளைநிலங்களை பாதித்து மக்களின் உயிரை பறிக்கும் எமனாக மாறியிருக்கிறது என்றும் கொடிய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுகளில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

Next Story