கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன் எம்.எல்.ஏ. குணமடைந்தார்


கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன் எம்.எல்.ஏ. குணமடைந்தார்
x
தினத்தந்தி 22 Sept 2020 9:03 AM IST (Updated: 22 Sept 2020 9:03 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.பி.சண்முகநாதனுக்கு கடந்த 12-ந் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தூத்துக்குடி, 

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 14-ந் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.பி.சண்முகநாதனுக்கு கடந்த 12-ந் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, சுகாதாரத்துறையினர் அறிவுரையின்படி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. சண்முகநாதன் எம்.எல்.ஏ. கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த போதிலும், சுகாதாரத்துறையினர் அறிவுரையின்படி மேலும் சில நாட்கள் வீட்டில் தனிமையில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

Next Story