பவானிசாகர் அணை நீர்வரத்து நிலவரம்


பவானிசாகர் அணை நீர்வரத்து நிலவரம்
x
தினத்தந்தி 22 Sept 2020 10:02 AM IST (Updated: 22 Sept 2020 10:02 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

ஈரோடு,

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் நீலகிரி மாவட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.32 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 9,723 கனஅடியாக உள்ள நிலையில், பாசனத்திற்காக தற்போது வினாடிக்கு 3,050 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணையில் தற்போது 29.7 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.

Next Story