தமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


தமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 22 Sept 2020 6:29 PM IST (Updated: 22 Sept 2020 6:36 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.  கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்திற்கு மேல் கொரோனா தொற்றுகள் பதிவாகி வருகின்றன.  எனினும் நேற்றுடன் ஒப்பிடும்பொழுது இன்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

இதுபற்றி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,52,674 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 76 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,947 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 989 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,57,614 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோன்று சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,348 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என சுகாதார துறை அறிக்கை தெரிவித்து உள்ளது.

Next Story