இந்தி தெரியாததால் கடன்தர முடியாது என சொல்வதா? ‘சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு’ மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை


இந்தி தெரியாததால் கடன்தர முடியாது என சொல்வதா? ‘சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு’ மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 Sept 2020 12:45 AM IST (Updated: 23 Sept 2020 12:36 AM IST)
t-max-icont-min-icon

இந்தி தெரியாததால் கடன்தர முடியாது என சொல்வதா? ‘சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு’ என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ‘முகநூல்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

ஜெயங்கொண்டத்தில் வாழும் ஓய்வுபெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியன் உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டு சென்றபோது, ‘இந்தி தெரியாத உங்களுக்கு கடன் தரமுடியாது’ என்று ஆணவத்துடன் கூறியிருக்கிறார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் வட இந்திய அதிகாரி.

இந்தி மொழி வெறி எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா? பா.ஜ.க. அரசின் பின்புலம் இதற்கு காரணமா?.

எதுவாக இருந்தாலும் தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்! சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு; எச்சரிக்கை!.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

Next Story