மாநில செய்திகள்

கொரோனா பரிசோதனை செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் - முதலமைச்சர் + "||" + TN Cm seek Financial assistance to Pm

கொரோனா பரிசோதனை செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் - முதலமைச்சர்

கொரோனா பரிசோதனை செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் - முதலமைச்சர்
கொரோனா பரிசோதனை செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை,

கொரோனா தடுப்புக்காக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிகிச்சை, சுகாதார வசதி ஆகியவை குறித்து பாதிப்பு அதிகம் உள்ள  மராட்டியம், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா,  உத்தர பிரதேசம், டெல்லி, பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, கொரோனா பரிசோதனை செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினார்.  முதல் அமைச்சர் பழனிசாமி மேலும் கூறுகையில்,

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா மரணம் குறைவு ஆகும். தமிழகத்துக்கு ரூ.3000 கோடி நிதி தேவைப்படுகிறது.  தமிழகத்தில் நாள்தோறும் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. நாள்தோறும் கொரோனா பரிசோதனைக்கு ரூ.6.8 கோடி செலவாகிறது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 3 மாதங்களுக்குப் பின் 50 ஆயிரத்திற்கு கீழ் வந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு
கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல், அதிரடியாக குறையத்தொடங்கி இருப்பது நாட்டு மக்கள் அத்தனைபேரையும் நிம்மதிப்பெருமூச்சு விட வைத்துள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.03 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.03 கோடியாக உயர்ந்துள்ளது.
3. அசாமில் மேலும் 698- பேருக்கு கொரோனா
அசாமில் மேலும் 698- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதிப்பு 4 கோடியைக் கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல்
உலக அளவில் கொரோனா பாதிப்பு 4 கோடியைக் கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
5. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
கர்நாடகாவில் இன்று மேலும் 5,018 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.