மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 49,000 கனஅடியாக குறைவு


மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 49,000 கனஅடியாக குறைவு
x
தினத்தந்தி 24 Sept 2020 9:28 AM IST (Updated: 24 Sept 2020 9:28 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 61,000 கனஅடியிலிருந்து 49,000 கனஅடியாக குறைந்துள்ளது.

மேட்டூர்,

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரத் துவங்கியதன் காரணமாக, கடந்த 2 நாட்களாக அணையின் நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனை தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்றைய நிலவரப்படி விநாடிக்கு 61 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

இந்நிலையில் இன்று மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தற்போது வினாடிக்கு 49 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 98.2 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 62.53 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு மேற்கு பாசனத்திற்காக விநாடிக்கு 850 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

Next Story