தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2%; குணமடைவோர் விகிதம் 90% மேல் உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்


தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2%; குணமடைவோர் விகிதம் 90% மேல் உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 24 Sep 2020 1:27 PM GMT (Updated: 24 Sep 2020 1:27 PM GMT)

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2% ஆகவும், குணமடைவோர் விகிதம் 90% மேல் உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2% ஆகவும், குணமடைவோர் விகிதம் 90% மேல் உள்ளதாகவும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா தொற்றை கண்டறிய RT-PCR பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதத்தை 6.4% என்ற அளவிற்கு குறைத்துள்ளோம். கொரோனா இறப்பு விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே இலக்கு. 

தமிழகத்தில் இதுவரை 68,15,644 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. 178 மையங்கள் மூலம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா தடுப்பு பணிகளுக்கு 6 மாதங்களில் ரூ.831 கோடி செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2% ஆக உள்ளது. இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90% மேல் உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Next Story