வரும் 29-ம் தேதி மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
8 கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் வரும் 29-ம் தேதி மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
சென்னை
தமிழகத்தில் செப்டம்பர் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதோடு, பல்வேறு தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. முக்கியமாக மாநிலத்திற்குள் பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவையும் அனுமதிக்கப்பட்டு உள்ளன.
இது போன்ற தளர்வினால் கொரோனா தொற்று அதிகம் பரவும் என்று கருதி, வழிகாட்டி விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் அவற்றை மீறுவதை குற்றம் என்று அறிவித்து அபராத தொகையையும் அதிகரித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
8 கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் வரும் 29-ம் தேதி மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
Related Tags :
Next Story