சுமுகமாக செல்ல இருதரப்பினரும் மறுத்ததால் நடிகர் சங்கத் தேர்தல் வழக்குகளை விசாரிக்க ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுப்பு
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் தேர்தல் நடந்தது.
சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் தேர்தல் நடந்தது. ஆனால், இந்த தேர்தலில் உறுப்பினர்கள் அனைவரையும் ஓட்டுப்போட அனுமதிக்கவில்லை என்பது உள்பட பல காரணங்களை கூறி சென்னை ஐகோர்ட்டில் உறுப்பினர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, தேர்தலை ரத்து செய்தார். மீண்டும் புதிய தேர்தலை நடத்த உத்தரவிட்டார். இதை எதிர்த்து நடிகர்கள் விஷால், கார்த்தி உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர், சட்டப்போராட்டத்தின் மூலம் இருதரப்பினரும் என்ன சாதிக்க போகிறீர்கள்? இருதரப்பினரும் சுமுக தீர்வு காணவேண்டும். அதனால் நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்துவதா? அல்லது கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணலாமா? என்பது குறித்து இருதரப்பினரும் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பினரும் சுமுக முடிவுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. வழக்கை தொடர்ந்து நடத்தப்போவதாக கூறினர். இதையடுத்து நீதிபதிகள், ‘ஐகோர்ட்டின் அறிவுரையை ஏற்று இருதரப்பும் சுமுகமாக செல்ல மறுப்பதால், இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க விரும்பவில்லை’ என்று கருத்து கூறினர். பின்னர், இந்த வழக்கை வேறு டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தனர்.

Related Tags :
Next Story