சுழற்சி முறையில் வகுப்புகள் நடக்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 1-ந்தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதி தமிழக அரசு அறிவிப்பு
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டு இருக்கிறது. மேலும் இவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. நோய்த்தொற்று தீவிரமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தாமதமாகி வந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரி திறப்பு குறித்து மத்திய அரசு அறிவித்தது. ஆனால் தமிழக அரசு இதுபற்றி இன்னும் எந்த நிலைப்பாடும் அறிவிக்கவில்லை.
அதேபோல், பள்ளிகள் திறப்பு பற்றியும் தமிழகத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி கேட்கும் போது கூட, தற்போது அதற்கான சாத்தியம் இல்லை என்றே சொல்லி வந்தார். இந்த நிலையில், தமிழக அரசின் தலைமை செயலாளர் க.சண்முகம், ‘10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதி’ என்று நேற்று திடீரென அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதன்படி, பள்ளிக்கல்வி துறை 10 முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி கேட்டு இருந்தது. அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்படுகிறது. 50 சதவீதம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவும் அனுமதிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிகள் செயல்படும் போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இதற்காக மாணவர்களை இரு பிரிவுகளாக பிரிக்க வேண்டும். முதல் பிரிவு மாணவர்களை வாரத்தில் திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளிலும், இரண்டாம் பிரிவு மாணவர் களை செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக் கிழமைகளிலும் சுழற்சி முறையில் அனுமதிக்க வேண்டும்.
அதேபோல், ஆசிரியர்களையும் பிரித்து, ஒரு பிரிவினரை திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளிலும், அடுத்த பிரிவினரை புதன்கிழமை, வியாழக்கிழமைகளிலும் பணிக்கு வர சொல்ல வேண்டும். அப்படியே சுழற்சி முறையில் அவர்கள் பணி செய்ய அறிவுறுத்த வேண்டும்.
மாணவர்கள் கொரோனா காலங்களில் விடுபட்ட பாடங்கள், சந்தேகங்களை ஆசிரியர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவும், வழிகாட்டுதல்களையும் பள்ளிகளுக்கு வந்து பெறலாம். மாணவர்கள் அப்படி வரும் பட்சத்தில் பெற்றோர், பாதுகாவலர்களிடம் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற்று வர வேண்டும். இருப்பினும் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் ஆன்லைன் மற்றும் பிறமுறைகள் மூலம் கல்வி தொடரப்படும்.
கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை. அப்படி இருக்கும் மாணவர்கள் செல்போன் மூலம் ஆசிரியர்களிடம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.
சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் பள்ளிக்கு மாணவர்களை அழைக்கும் போது 50 சதவீத மாணவர்கள் மட்டும் ஒருநாளைக்கு அனுமதிக்க வேண்டும். ஆசிரியர்-மாணவர் இடையேயான தொடர்பு சீரான முறையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையான இடங்களில் கூட்டத்தை தவிர்க்க கட்டங்கள் வரைந்திருக்கப்பட வேண்டும்.
வகுப்பறையில் ஒரு மாணவருக்கும், மற்றொரு மாணவருக் குமான இடைவெளி 6 அடி இருக்க வேண்டும். பருவநிலை நன்றாக இருந்தால், பள்ளி வளாகத்தில் கூட வகுப்பறையை மேற்கொள்ளலாம். இறைவணக்கம், விளையாட்டு உள்பட சில நிகழ்வுகளில் அதிக மாணவர்கள் கூடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நீச்சல் வகுப்புகளுக்கு அனுமதி இல்லை.
பள்ளி வளாகத்தில் கைகழுவுவதற்கு சோப்பு, கிருமிநாசினி திரவம் மற்றும் தண்ணீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்கு பதிலாக மாற்று வருகைப்பதிவு முறையை (தொடர்பு இல்லாத வகையில்) பின்பற்றலாம். ஏ.சி. பயன்படுத்தக்கூடாது. அப்படி தேவைக்கான அவசியம் இருக்கும் பட்சத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி ஏ.சி.யை பயன்படுத்தலாம்.
பள்ளிக்கு வரும் போது ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் முக கவசம் கண்டிப்பாக அணிந்து வர வேண்டும். உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களை பள்ளிக்கு உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். 99 டிகிரிக்கு மேல் உடல் வெப்பநிலை இருந்தால் உள்ளே அனுமதிக்க வேண்டாம். செய்முறை கூடங்களில் (பிராக்டிகல் லேப்) சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
பள்ளி வாகனங்களில் மாணவர்களை அழைத்து வரும்போதும், அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story