கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை


கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம்  ஆலோசனை
x
தினத்தந்தி 26 Sep 2020 10:26 AM GMT (Updated: 26 Sep 2020 10:26 AM GMT)

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு மத்தியில் தற்போது அமலில் உள்ள  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30 ஆம் தேதியோடு முடிவுக்கு வர உள்ளது.

ஒவ்வொரு முறை ஊரடங்கின்போதும் அது முடிவுக்கு வரும் முன் தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம். பின்னர் மருத்துவ நிபுணர்கள், ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவார். இன்று காலை தலைமைச் செயலாளர் சண்முகம் கொரோனா தொற்று அதிகம் உள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலாளருடன் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி, டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொடந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை மண்டல சிறப்பு குழுவுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Next Story