மாநில செய்திகள்

சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி + "||" + It was against Sasikala This regime and party is ongoing Minister KC Veeramani

சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி

சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி
சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் நடமாடும் நியாயவிலைக் கடைகள் திட்டத்தை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, இன்று தொடங்கி வைத்தார். 

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

"தமிழகத்தில் நடமாடும் நியாயவிலைக் கடைகளை முதல்வர் பழனிசாமி கடந்த 21-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. குக்கிராமங்களில் வசிக்கும் பொதுக்கள் இந்தத் திட்டத்தால் அதிக பலன் பெறுவார்கள். 

அதிமுகவில் சசிகலா இணைப்பு குறித்து பத்திரிகைகள்தான் குழப்பத்தை உருவாக்குகின்றன. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்கள் தேவை இல்லாதவர்கள், மக்களால் வெறுக்கப்படக் கூடியவர்கள் என்ற நிலையில்தான் இன்றைக்கு இந்த ஆட்சியும் கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

அதேபோல், முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த சர்ச்சையும் இல்லை. சுமுகமாக இருக்கிறது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு பத்திரப் பதிவு அதிகரித்து வருகிறது என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்

1. அக்டோபர் 19: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் வெளியாகி உள்ளது.
2. அக்டோபர் 17: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் வெளியாகி உள்ளது.
3. நீட் தேர்வில் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் சாதனை ஓ.பன்னிர்செல்வம் வாழ்த்து
ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஜீவித் குமார், 2020 நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார்.
4. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம் மாவட்டம் வாரியாக
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம் மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.
5. சசிகலாவின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துகள் முடக்கம் - வருமானவரித்துறை நடவடிக்கை
சசிகலாவுக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சிறுதாவூர் நிலம் மற்றும் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துகளை பினாமி சட்டத்தின்கீழ் வருமானவரித்துறையினர் முடக்கி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.