பெரியார் சிலை அவமதிப்பு: சமுக விரோதிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஓ.பன்னீர் செல்வம்


பெரியார் சிலை அவமதிப்பு: சமுக விரோதிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஓ.பன்னீர் செல்வம்
x
தினத்தந்தி 27 Sep 2020 6:21 AM GMT (Updated: 27 Sep 2020 6:21 AM GMT)

திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான, சமுக விரோதிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிப்பட்டது. சிலை அவமதிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான, சமுக விரோதிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “சமூகநீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் சிலையை திருச்சியில் மர்மநபர்கள் அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சமுக விரோதிகள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story