மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை; குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களை பெற முடியும் + "||" + In Tamil Nadu ration shops Biometric method

ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை; குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களை பெற முடியும்

ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை; குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களை பெற முடியும்
ரேஷன் கடைகளில் வருகிற ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வருகிறது. இதன் மூலம் இனி குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை பெற முடியும்.
சென்னை

 தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரேஷன் பொருட்கள் வாங்க சென்றால் ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோர்ட்டை கடை ஊழியரிடம் உள்ள பாயிண்ட் ஆப் சேல் மிஷினில் ஸ்கேன் செய்யப்படும். 

தேவையான பொருட்கள் வழங்கப்படும். இந்த நடைமுறையின் மூலம் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர் மட்டுமின்றி வீட்டில் வேலை செய்பவர், தெரிந்தவர்கள் என யாரும் வந்து கார்டை காட்டி பொருட்களை வாங்க முடியும்.  இதில் சில முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இதை தடுக்கும் வகையில் கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் விரல் ரேகையை பதிவு செய்து மட்டுமே, பொருட்களை வாங்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. 

இதன்மூலம், ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள், தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள் வாங்க முடியும் என்ற நிலை உருவாகும். இது குறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சென்னை தெற்கு துணை ஆணையர் பெர்சி சாமுவேல் சென்னை உணவு பொருள் வழங்கல் துறை உதவி ஆணையாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். 

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கைரேகை பதிவின் மூலம் வழங்குவதற்கு பழைய விற்பனை முனைய இயந்திரத்தை மாற்றி புதிய விற்பனை முனைய இயந்திரம் வரும் 30ம் தேதிக்குள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் விற்பனையாளர்களுக்கு கடந்த 25,26 ஆகிய 2 நாட்களில் சமூக இடைவெளியை பின்பற்றி புதிய விற்பனை முனைய இயந்திரம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன. எனவே, அந்த நாட்களில் பொருட்கள் வாங்க முடியாத குடும்ப அட்டைதாரர்கள் இன்றும் நாளையும் (செப்.28, 29) பொருட்கள் பெற்று செல்லலாம். 

புதிய விற்பனை முனையை இயந்திரத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ளுமாறு நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் ஒரு வேளை விற்பனை முனைய இயந்திரத்தை அலட்சியமாக, தவறாக கையாளுதல் அல்லது சேதப்படுத்தினால் அதனை சரி செய்ய அல்லது மாற்றி வழங்குவதற்கான தொகை, சம்பந்தப்பட்ட நியாய விலை கடை விற்பனையாளரே செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கடந்த 25,26 ஆகிய தேதிகளில் புதிய விற்பனை முனைய இயந்திரம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இனி குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை பெற முடியும்.                   


தொடர்புடைய செய்திகள்

1. ரேஷன் கடைகளில் விரல்ரேகை பதிவு முறை தற்காலிகமாக நிறுத்தம் - பொதுமக்கள் மகிழ்ச்சி
ரேஷன் கடைகளில் விரல்ரேகை பதிவு முறையில் உணவு பொருட்கள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டதால் பழைய முறைப்படி உணவு பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்களும், கடை ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
2. எந்திரத்தில் மாற்றம்: ரேஷன் கடைகளில் இன்று முதல் காலதாமதம் இன்றி பொருட்கள் வினியோகிக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
ரேஷன் கடைகளில் இன்று முதல் காலதாமதம் இன்றி பொருட்கள் வினியோகிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
3. ரேஷன் கடைகளில் அன்றாடம் பிரச்சினை: விரல்ரேகை பதிவு முறையை மாற்றாவிட்டால் போராட்டம் - ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் எச்சரிக்கை
ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு முறையை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் எச்சரிக்கை விடுத்தார்.
4. ரேஷன் கடையில் தேவைக்கு ஏற்ப பாமாயில் வழங்க கூடுதல் ஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவு
ரேஷன் கடையில் பாமாயிலை தேவைக்கு ஏற்ப வழங்க கூடுதலாக ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
5. ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டம் - முதலமைச்சர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.